குஷ்பூக்கு எதிராக வார்த்தை குண்டு வீசும் கே.எஸ்.அழகிரி..! கல்வி கொள்கையால் டுவிட்டர் கலகம்

0 4816

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பூ ட்விட்டரில் கருத்துப் பதிவிட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் தொண்டர்கள் ட்விட்டரில் குஷ்பூவுடன் யுத்தம் நடத்தி வருகின்றனர்...

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை இருந்துவரும் இரு மொழிக் கொள்கைக்கு பதிலாக அமல்படுத்த உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பூ, புதிய கல்வி கொள்கையை வரவேற்று ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் குஷ்பூவை வார்த்தைகளால் வறுத்தெடுக்கத் தொடங்கினர்.

திரைப்பட நடிகை மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் குஷ்பூ பா.ஜ.க.வில் இணைவார், விரைவில்.. என்று ஒருவர் கருத்துப் பதிவிட, பதிலடியாக லூசா நீங்க என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில், காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு, கட்சியின் அமைப்புக்குள் பேசினால் வரவேற்பு உண்டு, வெளியில் பேசினால் அதன் பெயர் முதிர்ச்சியின்மை என்று சுட்டிக்காட்டியதோடு இந்த ஒழுக்கமின்மை விரக்தியிலிருந்து வருகின்றது, இதனை குணப்படுத்த யோகாவே சிறந்த மருந்து என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ள குஷ்பூ கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து தனது கருத்து மாறுபடுவதால் ராகுல் காந்தியிடம் மன்னிப்புக் கேட்பதாகவும், தான் தலையை ஆட்டும் ரோபோவாகவோ, கைப்பாவையாகவோ இருப்பதை விட உண்மையைப் பேசுகின்றேன் என்று கே.எஸ் அழகிரிக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தான் ஜனநாயகத்தை முழுமையாக நம்புவதால் கருத்து வேறுபாடு நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் பாஜகவினர் பலர் குஷ்பூவின் ட்விட்டை அதிகமாக ரீ டுவிட் செய்து வருகின்றனர். இதனால் ஒரே நாளில் குஷ்பூவை பின் தொடர்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments