லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அடுத்த கட்டமாக 300 பேர் மீது பரிசோதனை
லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள், நூற்றுக் கணக்கானோர் மீது கொரோனா தடுப்பூசி பரிசோதனையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 20 தடுப்பூசிகள் மனிதர்கள் மீதான பரிசோதனையில் உள்ளன. மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசியும், பயான்டெக்-ஃபைசர் தடுப்பூசியும் தலா 30 ஆயிரம் பேர் மீது பரிசோதிக்கப்படுகிறது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள தடுப்பூசி, சீன தயாரித்துள்ள தடுப்பூசி உள்ளிட்டவையும் ஆய்வில் உள்ளன.
இந்நிலையில் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் தயாரித்துள்ள தடுப்பூசி, முதல் கட்ட பரிசோதனையில் பக்க விளைவுகள் ஏதுமில்லை, பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக 300 பேர் மீது பரிசோதிக்கப்பட உள்ளதாக, இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் Dr Robin Shattock தெரிவித்துள்ளார்.
UK scientists to immunize hundreds with coronavirus vaccine - ABC News - https://t.co/1a5VsV9mPP via @ABC
— Vaccine Research (@vaxresearch) July 31, 2020
Comments