சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகம் தயாராக உள்ளது - மைக் பாம்பியோ
பூடானுக்கு சொந்தமான பகுதிக்கு உரிமை கொண்டாடுவது, இந்திய எல்லையில் அத்துமீறுவது போன்ற சீனாவின் செயல்கள், உலக நாடுகளை ஆழம் பார்க்கும் செயல் என அமெரிக்கா கூறியுள்ளது.
அண்டை நாடுகள் மீதான அச்சுறுத்தல்களுக்கு உலக நாடுகள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை சீனா அறிந்து கொள்ள முயற்சிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
ஆனால் சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகம் தயாராக உள்ளது என்பதே தனது உறுதியான நம்பிக்கை என்றும், இதை தீவிரமான பிரச்சனையாக எடுத்துக் கொண்டு மேலும் தயாராக வேண்டும் என்றும் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
Comments