பிறந்த குழந்தைகளுக்கான காச நோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி-மீண்டும் கிண்டியில் தொடக்கம்

0 1390

பிறந்த குழந்தைகளுக்கான காசநோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை கிண்டி பிசிஜி ஆய்வுக்கூடம் தொடங்கியுள்ளது.

2008ஆம் ஆண்டு கிண்டி ஆய்வு கூட உரிமம் ரத்து செய்யப்பட்டதால், மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிண்டி ஆய்வு மையம் மீண்டும் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இதில் பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னர் முதற்கட்டமாக இன்று 4.5 லட்சம் மருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி கிண்டி ஆய்வு மையத்தில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வு மைய ஆலோசகரான மருத்துவர் சேகர், 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 170 லட்சம் பிசிஜி தடுப்பு மருந்து குப்பிகளை தயாரிக்க உள்ளதாகவும், இதற்காக மத்திய அரசு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments