ஆந்திராவில் போதைக்காக சானிட்டைசர் குடித்த 13 பேர் பலி

0 15717
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மதுவுக்குப் பதிலாக சானிட்டைசர் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மதுவுக்குப் பதிலாக சானிட்டைசர் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. அங்கு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், பக்கத்து மாவட்டங்களிலும் 3 மடங்கு அதிக விலை வைத்து மது விற்பனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் மது வாங்க முடியாத கூலித் தொழிலாளிகள், துப்புரவு பணியாளர்கள், யாசகர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் போதைக்காக சானிட்டைசரைக் குடித்துள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் காலை 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments