முழுக் கல்விக் கட்டணத்தையும் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை-உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

0 2886
நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணத்தையும் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணத்தையும் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

2020-2021ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவீத தொகையை மட்டும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வசூலித்து கொள்ளலாம், பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குள் 35 சதவீத தொகையை வசூலித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ள நீதிமன்றம், கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள தொகை குறித்து முடிவு செய்யலாம் என இடைக்கால உத்தரவில் கூறியிருந்தது.

இதை மீறி, பல பள்ளிகள் முழு கட்டணத்தையும் மாணவர்களிடம் இருந்து  வசூலிப்பதாக, தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் அன்னலட்சுமி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் முறையிட்டார்.

எந்தெந்த பள்ளிகள் அவ்வாறு கட்டணம் வசூலிக்கிறது என்று தமிழக அரசு ஆகஸ்ட் 17ம் தேதி  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments