பொறியியல் கல்லூரிகளின் கடந்தாண்டு தேர்ச்சி விகிதங்கள் வெளியீடு..!
பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக, கல்லூரிகளின் கடந்தாண்டு தேர்ச்சி விகிதங்கள் அண்ணா பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரத்தில், 80 சதவீதத்துக்கும் மேல் 7 பொறியியல் கல்லூரிகளிலும், 75 சதவீதத்துக்கும் மேல் 20 பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் கேகேசி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி காஞ்சிபுரம் லார்டு வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.16 பொறியியல் கல்லூரிகளில் 1 முதல் 9 வரையிலான எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலை.யின் வளாகக் கல்லூரிகளான MIT-யில் 75.85 சதவீதம் பேரும், கிண்டி பொறியியல் கல்லூரியில் 70.74 சதவீதம் பேரும், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 69.49 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Comments