இந்து மதத்தை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என பேசியதாக இயக்குநர் வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்கு

0 20255
இந்து மதத்தை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என பேசியதாக, இயக்குனர் வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து மதத்தை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கறுப்பர் கூட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், இந்து மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தும், வேலு பிரபாகரன் பேட்டி அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மத, இன விரோத உணர்வுகளை தூண்டுவது, கலகம் செய்ய தூண்டுவது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் வைத்து இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேலுபிரபாகரனை, ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments