எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை - மத்திய அரசு
சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பாணை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு மற்றும் திட்ட செயல்பாட்டுப் பிரிவு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 6ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தரப்பில் தாக்கல் செய்யயப்பட்டுள்ள மனுவில், 2006ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அடிப்படையில் வெளியிட்ட அரசாணையின் படி சேலம்-சென்னை பசுமை சாலைக்கு நிலத்தை கையகப்படுத்தும்போது சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கையகப்படுத்தும் நிலத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக செப்பனிட்டு சாலை பணிகளை தொடங்கும் முன்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றால் போதும் என்பதால்,உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
Comments