பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது-உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா பரவல் அச்சம் நிலவுவதால், பக்ரீத் பண்டிகையின் போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட, அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மாடு, ஒட்டகம் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி, மதுரை வடஇந்தியர் சங்கத்தின் தலைவர் ஹூக்கம் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொது இடங்களில் விலங்குகள் பலியிடுவதை காவல்துறையினர் அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டனர்.
விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என மறைந்த முன்னாள் பிரதமர் நேரு வெளியிட்ட கருத்தை அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு ,விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது-உயர்நீதிமன்றம் உத்தரவு #Bakrid | #ChennaiHC https://t.co/T0rkkDofr5
— Polimer News (@polimernews) July 30, 2020
Comments