அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு வீடுகளில் சிகிச்சை-கேரள அரசு

0 3260
அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் வீடுகளில் இருந்தவாறே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆணையை கேரள அரசு பிறப்பித்துள்ளது.

அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் வீடுகளில் இருந்தவாறே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆணையை கேரள அரசு பிறப்பித்துள்ளது.

தற்போது முதல் கட்டமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் இது அனுமதிக்கப்படுவதாக அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் கழிவறையுடன் கூடிய தனி அறையில் தங்கும் வசதி உள்ளவர்கள் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெறலாம் எனவும்,  வார்டு மட்டத்திலான குழுவினர் வந்து சோதனை செய்த பின்னரே அதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வீடுகளில் வசதி இல்லாதவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள தனிமைப்படுத்தும் இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments