பல மாதங்களாக பல வீடுகளில் கைவரிசையில் ஈடுபட்ட வெளிநாட்டுத் திருட்டுக் கும்பல் கைது
கொலம்பிய நாட்டுத் திருட்டுக் கும்பலைக் கைது செய்த பெங்களூர் காவல்துறையினர், அவர்களிடம் இருந்து இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரில் பல இடங்களில் வீடுகளில் நகைக் கொள்ளை நடைபெற்று வந்தது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைக் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், ஒரு பெண் உட்படக் கொள்ளையர் மூவரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். விசாரணையில் இவர்கள் கொலம்பிய நாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் வந்தவர்கள் எனத் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து பூட்டு உடைக்கும் கருவிகள், வாக்கி டாக்கி, மொபைல் ஜாமர் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் கொள்ளையடித்து வைத்திருந்த 2 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். கைத்துப்பாக்கி, 23 தோட்டாக்கள், 2 இருசக்கர வாகனங்கள், 3 பாஸ்போர்ட்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Comments