'அவள் மட்டும் சமூகத்தில் அந்தஸ்தோடு இருக்கிறாளே' -அமெரிக்காவில் பொறாமையில் மனைவியை கொலை செய்த இந்தியர்
மனைவி மட்டும் சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் இருக்கிறாளே என்கிற பொறாமையில் கொலை செய்த கணவரை அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மோனிப்பள்ளியை சேர்ந்தவர் மெரின் ஜாய். அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள Broward health Coral Springs மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார். கடந்த செவ்வாய் கிழமை வழக்கமாக பணிக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, திடீரென்று மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தியதில் மெரின் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் பிலிப்மேத்யூ (34) என்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த பெண்ணின் கணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2016- ம் ஆண்டு இந்த மெரினுக்கும் பிலிப்புக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு வயது குழந்தையும் உள்ளது.
அமெரிக்காவில் பிலிப்புக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால் , இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி மட்டும் நல்ல பணியில் சமுதாயத்திலும் நல்ல பெயருடன் இருக்கிறாளே என்கிற ஆதங்கம் பிலிப்பிடத்தில் இருந்துள்ளது. தொடர்ந்து, பொறாமை காரணமாக, பிலிப் மெரினை உடல்ரீதியாக கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால், கணவரை விட்டு பிரிந்து தனியாக மெரின் வாழ்ந்து வந்துள்ளார். குழந்தையை பார்க்கவும் பிலிப்பை அனுமதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது, இந்த கோபத்தில்தான் மெரீனை பிலிப் கொலை செய்ததாக கூறுகிறார்கள்.
கடந்த 2019- ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த தம்பதி அமெரிக்காவிலிருந்து கேரளா வந்துள்ளது. இங்கு வைத்தும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜனவரி மாதத்தில் மீண்டும் அமெரிக்கா திரும்புகையில் தனித் தனியாகவே இருவரும் டிக்கெட் எடுத்து சென்றனர் என்று உறவினர்கள் கேரள போலீஸிடத்தில் கூறியுள்னர்.
Comments