இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 2வது நாளாக சரிவு
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக வர்த்தகம் சரிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகள் குறைந்து 37 ஆயிரத்து 736 ஆக சரிந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 100 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 102 ஆக சரிந்தது. நிதி சேவை, எரிசக்தி, உலோகம் துறை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்ததால் சந்தையின் இறக்கத்திற்கு காரணமாக அமைந்நது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது. அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து, 74 ரூபாய் 84 காசுகளாக இருந்தது.
Comments