கல்லூரி மாணாக்கர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த திட்டம் - யுஜிசி
கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியே இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த திட்டமிட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டுள்ள இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பல்வேறு மாநில அரசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், அது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், மாணவர்களின் எதிர்கால நலன்களுக்காக இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பருக்குள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு அடுத்து ஒரு சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் UGC தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனில் அரசு அக்கரையுடன் செயல்படும் என்றும் உறுதியளித்துள்ள UGC, உயர்கல்வி தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
Comments