பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் மூலம் இறைச்சி விற்பனை தீவிரம்
இந்தோனேசியாவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக்கான கால்நடை விற்பனை, ஆன்லைனில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, சந்தைகளில் பக்ரீத் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் இறைச்சியை வாங்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டை விட ஆன்லைன் வழி இறைச்சி விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தலைநகர் ஜகார்த்தாவில் செயல்படும் கால்நடை பண்ணையின் உரிமையாளர் அப்துல் கஃபர் தெரிவித்துள்ளார்.
Indonesia farms see boom in online sales of sacrificial animals for Eid - Reuters https://t.co/XgyhrqEDdY
— The Edge Malaysia (@theedgemalaysia) July 29, 2020
Comments