தமிழகத்தில் ஆகஸ்ட் 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு

0 21979
தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்குஅமல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், ஊரடங்கை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். 144 தடையுத்தரவின் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

மாநிலம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுபகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு மற்றும் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதேசமயம், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடரவேண்டிய நிலையில் அரசு உள்ளது, இதனால் நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்த இயலும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments