தமிழகத்தில் பக்ரீத்தை முன்னிட்டு தடையை மீறி ஒட்டகம் வெட்டப்படுகிறதா என கண்காணிக்க காவல் ஆணையர் உத்தரவு
தமிழகத்தில் இறைச்சிக்காக ஒட்டகம் வெட்ட உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தடையை மீறி ஓட்டகம் கொண்டு வரப்படுகிறதா என கண்காணிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி தமிழகத்தில் ஒட்டகங்களை வெட்டுவதற்கென, பிரத்யேக அறுவைக்கூட வசதிகள் இல்லை என்பதால் அதை அனுமதிக்க முடியாது என கடந்த 2016ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பக்ரீத் கொண்டாடப்பட உள்ள நிலையில், பலி கொடுப்பதற்காக ஒட்டகங்கள் சட்ட விரோதமாக வாகனங்களில் கொண்டு வரப்படுகிறதா? தடையை மீறி வெட்டப்படுகிறதா? என கண்காணிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Comments