ஆப்பிள், அமேசான், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி சரமாரி கேள்வி
போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
காணொலி வாயிலாக நடைபெற்ற விசாரணையில், 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் குறிப்பிட்ட பெரு நிறுவனங்கள், தங்களது வளர்ச்சிக்காக சிறு நிறுவனங்களை முடக்கி, மக்களின் தேர்வு செய்யும் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், அமேசான், கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தன. அதேசமயம், தாங்கள் அமெரிக்காவை சேர்ந்த பெருநிறுவனம் அல்ல எனவும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Comments