சுகாதாரப் பணியாளர்களின் தியாகத்துக்கு நன்றி ... ஹஜ் பயணத்துக்கு முன்னுரிமை அளிக்கும் சவுதி !

0 1672

கொரோனாவிலிருந்து மீண்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் 30 விழுக்காடு பேருக்கு அவர்களின் தியாகத்துக்கு நன்றி தெரிவித்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயை எதிர்த்து போராடுவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதரத்துறை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தன்னலமற்று பணியாற்றும் இந்த முன்கள ஊழியர்கள் ஏராளமானோர் கொரோனா தாக்கி பலியுமாகியுள்ளனர். சவுதி அரேபியாவிலும் ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிராக உறுதியுடன் போராடும் இந்த சுகாதாரத்துறை ஊழியர்களை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது சவுதி அரசு. அதன்படி, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள 1000 பேரில் 300 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.,

ஹஜ் பயணம் மேற்கொள்வது இஸ்லாமிய மக்களின் முக்கிய கடமை ஆகும். இதனால், ஓவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகை காலத்தில் சுமார் 25 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் புனித தலமான மெக்கா , மெதீனாவில் குவிவார்கள். இந்த ஆண்டு நவீன இஸ்லாமிய வரலாற்றில் முதன் முறையாக ஹஜ் பயணத்தில் பங்கேற்க வெளிநாட்டு வாழ் இஸ்லாமிய மக்களுக்கு தடை விக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள மொத்தமே 1,000 பேர்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். சவுதியில் உள்ள வெளிநாட்டில் வாழும் சவுதி அரேபிய மக்கள் 70 சதவிகித பேருடன்  30 விழுக்காடு பேரும் கொரேனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியார்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்கள் உயிரை காக்க போராடிய சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சவுதி அரேபியா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments