ஓபிசி இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்... சோனியா, மம்தா உள்ளிட்ட தலைவர்களிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

0 2866
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு அழுத்தக் கொடுக்கக் கோரி சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு அழுத்தக் கொடுக்கக் கோரி சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார்.

மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசுகள்,இந்திய மருத்துவக் கவுன்சிலுடன் கலந்தாலோசித்து சட்டம் இயற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மேற்குவங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, மராத்திய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அப்போது ஓபிசி இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது, மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றையம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments