தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தொழிலாளர் சட்டம் பொருந்தும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0 3252
தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் பொருந்தும் எனச் சென்னை உயர்நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் பொருந்தும் எனச் சென்னை உயர்நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பாணையை எதிர்த்துக் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாகப் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், ஆஷா ஆகிய 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பில, தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் பொருந்தும் எனத் தெரிவித்தனர். தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகத் தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments