இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை பரிசாக அளித்த பிரான்ஸ்

0 10539
இந்தியாவுக்கு 120 வென்டிலேட்டர்களை பரிசாக பிரான்ஸ் நாடு அளித்துள்ளது.

இந்தியாவுக்கு 120 வென்டிலேட்டர்களை பரிசாக பிரான்ஸ் நாடு அளித்துள்ளது. 

கொரோனா பாதித்தோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அமெரிக்கா முதல்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளித்தது. இதையடுத்து இஸ்ரேல் நாடு  அண்மையில் 50 வென்டிலேட்டர்களை அளித்தது. இந்நிலையில் பிரான்ஸ் நாடு ஓசிரிஸ்-3 வென்டிலேட்டர்களை (Osiris-3 ventilators) 50 எண்ணிக்கையிலும், யுவெல் 830 ரக வென்டிலேட்டர்களை (Yuwell 830 ventilators) 70 எண்ணிக்கையிலும் அளித்துள்ளது.

அவற்றையும் 50 ஆயிரம்  உயர்தர செரோலாஜிக்கல் (high-quality serological) ஐஜிஜி/ஐஜிஎம் கொரோனா பரிசோதனை கிட்கள் (IgG/IgM test kits) மற்றும் 50 ஆயிரம் ஸ்வாப்களையும் (swabs) டெல்லியில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லீனாய்ன் (Emmanuel Lenain) இந்திய செஞ்சிலுவை பொது செயலாளர் ஆர்.கே. ஜெயினிடம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments