ரபேல் போர் விமானம்... வான்போரில் இந்தியாவின் துருப்புச்சீட்டு

0 5346
விமானப் படையில் 5 ரபேல் விமானங்கள் இணைந்த பின்னர், வான்படைத் திறனில் இந்தியா அண்டை நாடுகளை விட அதிக சக்தி வாய்ந்ததாக திகழும் என்பது உறுதியாகி உள்ளது.

விமானப் படையில் 5 ரபேல் விமானங்கள் இணைந்த பின்னர், வான்படைத் திறனில் இந்தியா அண்டை நாடுகளை விட அதிக சக்தி வாய்ந்ததாக திகழும் என்பது உறுதியாகி உள்ளது.

ரபேலால் விமானப்படையின் போர்த் திறனை அதிகரித்து, தெற்காசிய நாடுகளுக்கிடையே இந்தியாவின் பலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த 1997 ல் ரஷ்யாவின் சுகோய் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டதற்குப் பிறகு 22 ஆண்டுகளுக்குப் பிறகு இறக்குமதியாகும் முதலாவது போர் விமானம் ரபேல் ஆகும்.

நம்மிடம் உள்ள மிராஜ் 2000 மற்றும் சுகோய் விமானங்கள் மூன்று அல்லது நான்காம் தலைமுறை விமானங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரபேல் விமானம் நான்கரையாவது தலைமுறை விமானம் என பட்டியலிடப்பட்டுள்ளது. ரபேல் எதிரியின் ரேடார் கண்களுக்கு புலப்படாது என்பது சிறப்பு அம்சமாகும். விமானந்தாங்கி கப்பல் அல்லது கடலோர தளங்களில் இருந்து பறந்து உயரக் கூடியது என்பது மற்றோர் சிறப்பு அம்சமாக இருக்கிறது. உளவு பார்த்தல், வான்வெளி பாதுகாப்பு, உள் நுழைந்து தாக்குதல், அணு ஆயுத திறன், எதிரி போர்க்கப்பல்களை தாக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து விதமான போர் நடவடிக்கைகளையும் ரபேலால் மேற்கொள்ள முடியும்.

ஹெல்மெட் மவுன்டட் லைட், ரேடார் எச்சரிக்கை கருவிகள், பறத்தல் தொடர்பான விவரங்களை 10 மணி நேரம் வரை சேமித்து வைக்கும் வசதி, ஜாம்மர்கள், இன்ஃப்ரா ரெட் டிராக் சிஸ்டம்ஸ், மலைப் பிரதேசங்களில் இயக்கப்படுவதற்கான கோல்டு எஞ்சின் ஸ்டார்ட் வசதி, தாக்க வரும் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்கும் வசதி உள்ளட்டவை ரபேலில் உள்ளன.

விமானப் படையின் தங்க அம்புகள் என்று அழைக்கப்படும் 17 ஆவது விமான அணியில் ரபேல் விமானங்கள் இணைக்கப்படுகின்றன. ரபேலின் முதலாவது விமான அணி, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்பாலாவில் இருந்து இயங்கும். இரண்டாவது விமான அணி. மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா படைத் தளத்தில் நிறுவப்படும்.

பிரான்ஸ்,எகிப்து, கத்தார் ஆகியவற்றை தொடர்ந்து ரபேலை வைத்துள்ள 4 ஆவது நாடாக இந்தியா மாறி உள்ளளது. ரபேல் விமானங்களுக்கான பராமரிப்பு வசதிகள், தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றுக்கு விமானப்படை சுமார் 400 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

அதே நேரம் சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான 5 ஆம் தலைமுறை J-20 போர் விமானங்களுடன் ரபேலை ஒப்பிட முடியாது என்பதும் கவனிக்கத்தக்கதாகும், இந்த விமானங்களை சீனா தனது வான்படையில் விரைவில் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது வந்துள்ள 5 விமானங்கள் தவிர்த்து 13 ரபேல் விமானங்கள் வரும் பிப்ரவரி மாதத்திற்குள்ளும், எஞ்சிய விமானங்கள் 2022 ஏப்ரல்-மே மாத வாக்கிலும் இந்தியாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments