பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிடப் பணிகள் தீவிரம் - அமைச்சர் செங்கோட்டையன்

0 2410
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் தொட்டிப்பாளையத்தில் 22 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்டும் பணி, கொடிவேரி அணையைச் சுற்றுலாத்தலமாக மாற்ற 2 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை அவர் தொடக்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை எனத் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலுடன்  விளம்பரப் பலகை வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments