மும்பையில் 57 சதவிகித குடிசைவாழ் மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி?- ஆய்வில் கண்டுபிடிப்பு

0 4779

மும்பையில் 57 சதவிகித குடிசைப்பகுதி மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த நகரங்களிர் மும்பையும் ஒன்று. இங்குள்ள, தாராவியில் கொரோனா தொற்று மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால், ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்தி சாதித்து காட்டியது மும்பை மாநகராட்சி.

இந்த நிலையில், நிதி ஆயோக், டாடா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மும்பை மாநகராட்சி ஆகியவை இணைந்து மும்பையில் ஜூலை முதல் வாரத்தில் முக்கிய ஆய்வு ஒன்றை நடத்தின. மும்பை புறநகர் பகுதியான டைசர் , செம்பூர் மற்றும் நகரின் மத்திய பகுதியில் உள்ள சயான்- மட்டுங்கா (மூன்று பகுதிகளையும் சேர்த்து மொத்த மக்கள் தொகை 18 லட்சம்)ஆகிய இடங்களில் உள்ள மூன்று வார்டுகளில் 7,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இந்த மாதிரிகளில் கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மும்பையில் 42 சதவிகித மக்கள் குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள். எந்த அறிகுறியும் இல்லாமல் குடிசைப்பகுதி மக்களுக்கு அதிகளவில் கொரோனா பாதித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே  உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மும்பை குடிசைப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 57 சதவிகித மாதிரிகளில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி( HERD IMMUNITY)உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

அதே வேளையில், குடிசை இல்லாத  பகுதியில் வசிக்கும் மக்களிடத்தில் 16 சதவிகிதம் பேருக்கே கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறது என்று டாடா ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நிபுணர் சந்தீப் ஜூனேஜா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments