கொரோனா கட்டுப்பாடுகளால் ஏற்படும் உணவு பற்றாக்குறை.. 1.28 லட்சம் சிறுவர்கள் பலியாகும் அபாயம்..!
கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனாவை தடுக்கம் வகையில் பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக வேளாண் பகுதிகளுக்கும், அவை நுகரப்படும் சந்தைகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தொலை தூர கிராமங்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்களுக்கான விநியோகமும் தடைபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஏற்கெனவே உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10,000 வரையிலான சிறுவர்கள் பட்டினியால் உயிரிழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Lost jobs & incomes due to #COVID19 has led to an increase in the number of people facing acute food insecurity.@WFP & @FAO highlights 27 countries at risk of
— United Nations (@UN) July 28, 2020
significant food security deterioration, hunger & malnutrition. https://t.co/AGCybixmtzpic.twitter.com/cmxXhwdAIT
Comments