ஆக்ராவில் தாழ்த்தப்பட்ட பெண்ணின் உடலை எரிக்க மயானத்தில் அனுமதி மறுப்பு

0 2625
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணின் தங்களது மயானத்தில் எரியூட்ட உயர்சாதி வகுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சிதையில் இருந்து உடல் அகற்றப்பட்ட அவலம் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இறந்த பெண் நாட் எனப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரது உடலை சிதையில் வைத்த பின், 6 வயது மகன் தீ வைக்க முயன்ற போது அங்கு வந்த தாக்கூர் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உயர் வகுப்பினரான தங்களது மயானத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணை தகனம் செய்ய கூடாது என அவர்கள் விடுத்த மிரட்டலை அடுத்து வேறொரு மயானத்தில் தகனம் நடைபெற்றது.

இது குறித்து ஆக்ரா மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது. குற்றம் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆக்ரா எஸ்பி பப்லூ குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments