ஊழல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டு சிறை

0 2717
சுமார் 7400 கோடி ரூபாய் அரசு பணத்தை கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டி நடத்தப்பட்ட வழக்குகளில், முதல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7400 கோடி ரூபாய்  அரசு பணத்தை கையாடல் செய்ததாக  குற்றஞ்சாட்டி நடத்தப்பட்ட வழக்குகளில், முதல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் மேல் முறையீடு செய்வதற்கு காலவகாசம் அளிக்கும் வகையில் அவர் உடனடியாக கைது செய்யப்படவில்லை. 7 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடந்த விசாரணையின் முடிவில் இந்த தீர்ப்பு அளிக்கப்ப்ட்டுள்ளது. 

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து தாம் குற்றமற்றவர் என நிரூபிக்க உள்ளதாக நஜீப் ரசாக் கூறியுள்ளார். மலேசியாவின்  வரலாற்றில் ஊழலுக்காக ஒரு தலைவருக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் தடவை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments