குரோம்பேட்டை பகுதியில் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி

0 38585
சென்னை குரோம்பேட்டை பகுதியில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.

சென்னை குரோம்பேட்டை பகுதியில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.

மாநகரில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், திருநின்றவூர், வளசரவாக்கம், போரூர், சைதாப்பேட்டை, மதுரவாயல், அம்பத்தூர், பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மழை நீர் தேங்கியது. இதனால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறிய நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கழிவுநீர் கால்வாயை முறையாக அமைக்காததும், பாதாள சாக்கடைகளை பராமரிக்காததால் கழிவுநீர் சேர்ந்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாக குரோம்பேட்டை பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments