மேற்குவங்கத்தில் வாரம் 2 நாள் முழு ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
மேற்குவங்கத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரத்துக்கு 2 நாள்கள் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரம்தோறும் 2 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வாரம்தோறும் வேறு வேறு நாட்களில் இது அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.
இந்நிலையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆகஸ்ட் 31 வரை அது நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆகஸ்ட் 1இல் பக்ரீத் என்பதால் ஊரடங்கு இல்லை எனத் தெரிவித்த மம்தா பானர்ஜி, ஆகஸ்ட் 2ம் தேதி, 5ம்தேதி, 8ம் தேதி, 9ம் தேதி, 16ம் தேதி, 17ம் தேதி, 23ம் தேதி, 24ம் தேதி, 31ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
Comments