அயோத்தியில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ சதி திட்டம்
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆகஸ்டு 15ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமிடத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆகஸ்டு ஐந்தாம் நாள் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
இந்நிலையில் அங்கு ஆகஸ்டு 15ஆம் நாள் தாக்குதல் நடத்தப் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக ரா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்காக லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
5 குழுக்களை அனுப்பிப் பல இடங்களிலும் தாக்குதல் நடத்தி, உள்நாட்டுக் குழுக்களால் நடைபெற்ற தாக்குதல் போலத் தோற்றத்தை ஏற்படுத்த ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலைத் தடுக்க டெல்லி, அயோத்தி, காஷ்மீர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
Comments