ராஜஸ்தானில் காங்கிரசில் சேர்ந்த பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரையும் பதவி நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு
ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரை காங்கிரசில் இணைத்ததை எதிர்த்து பாஜக, பகுஜன் சமாஜ் ஆகியவை உயர்நீதிமன்றத்தை அணுகுகின்றன.
ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்து வந்த நிலையில் அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டனர்.
இந்நிலையில் கட்சி மாறிய 6 பேரையும் பதவியில் இருந்து நீக்கக் கோரி பாஜக சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இரண்டாம் முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments