சட்டப்பேரவையை கூட்ட சொல்வது எங்களின் உரிமை : அசோக் கெலாட்
சட்டப்பேரவையை கூட்ட சொல்வது தங்களது உரிமை என்று ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியதால் ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நிலவுகிறது. சட்டப்பேரவையை உடனடியாக கூட்டக்கோரி அவர் விடுத்த கோரிக்கையை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா நிராகரித்து விட்டார்.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய அசோக் கெலாட், ஆளுநர் சில கேள்விகளை கேட்டிருப்பதாகவும், அதற்கு விரைவில் பதிலளிக்க இருப்பதாகவும் கூறினார்
செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தங்களது எம்எல்ஏக்களை இழுத்து கொண்டதற்காக காங்கிரஸுக்கும், அசோக் கெலாட்டுக்கும் பாடம் புகட்ட எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்தார்.
Comments