வாகன உரிமையாளருக்கான காப்பீட்டு பாலிசி ஒரு ஆண்டாக குறைப்பு

0 7875
புதிய கார் அல்லது இரு சக்கர வாகனங்கள் வாங்கும் போது குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரைக்கான இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற விதி வாபஸ் பெறப்பட்டுள்ளதால், இனி செலவினம் குறையும்.

புதிய கார் அல்லது இரு சக்கர வாகனங்கள் வாங்கும் போது குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரைக்கான இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற விதி வாபஸ் பெறப்பட்டுள்ளதால், இனி செலவினம்  குறையும்.

இந்த விதியை மாற்றி முன்னர் இருந்தது போன்று ஓராண்டிற்கான இன்ஷூரன்ஸ் மட்டும் எடுத்தால் போதும் என ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.

இதனால் வரும் 1 ஆம் தேதிமுதல் புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு ஆன்ரோடு விலை குறையும். இந்த விதி மாற்றத்தால், வாகன உரிமையாளர்கள் விரும்பினால் கூட நீண்ட கால இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்க முடியாது.

இந்த ஓராண்டு பாலிசி என்பது வாகன உரிமையாளர்களுக்கான முழுமையான காப்பீட்டுக்கு மட்டுமே. மூன்றாம் நபர் காப்பீடு தேவை என்றால், 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கான பாலிசி கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments