சீனாவின் முக்கிய நகருக்கு அருகே பறந்த அமெரிக்க போர் விமானம்
துணை தூதரகங்களை மூடுவதில் அமெரிக்காவும் சீனாவும் போட்டா போட்டியில் ஈடுபட்டு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க போர் விமானங்கள் சீனாவுக்கு மிக அருகே சென்றதாக பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் P-8A நீர்மூழ்கி எதிர்ப்பு விமானமும், EP-3E உளவு விமானமும் தைவான் நீரிணை வழியாக Zhejiang மற்றும் Fujian கடலோர பகுதிகளில் பறந்ததாக சீன பீகிங் பல்கலைகழக வட்டாரங்கள் டுவிட் செய்துள்ளன.
அமெரிக்க ஏவுகணை அழிப்பு கப்பலான ரபேல் பெரால்டாவில் இருந்து பறந்துயர்ந்த P-8A போர் விமானம் ஷாங்காய்க்கு 76.5 கிலோ மீட்டர் அருகே வந்ததாகவும் டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. அண்மை காலங்களில் முதன்முறையாக அமெரிக்க போர் விமானங்கள் சீனாவுக்கு இவ்வளவு அருகில் வந்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments