மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேற்றுகிறார்கள் - விஜயலட்சுமி

0 30539
மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேற்றுகிறார்கள் - விஜயலட்சுமி

தற்கொலைக்கு முயற்சி செய்து சிகிச்சை பெற்று வந்த தன்னை, அரசியல் நெருக்கடிக்கு பணிந்து, எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் மருத்துவமனை வெளியேற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி கண்ணீரோடு புகார் கூறினார்.

போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு நடிகை காயத்ரி ரகுராம் மீதும் குற்றம்சாட்டினார்.

சீமான் தன்னை நிம்மதியாக வாழவிட வேண்டும் என்பது மட்டுமே தனது கோரிக்கை என்று கூறிய விஜயலட்சுமி, தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட உள்ளதாகவும் கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்து விட்டு விஜயலட்சுமி புறப்பட்டபோது, பாஜகவின் மகளிரணி மாநில செயலாளர் ஜெயலட்சுமி அவரை அணுகி, தான் சட்ட ஆலோசனை மையம் வைத்திருப்பதாக கூறி உதவி செய்ய முன்வந்தார்.

ஆனால் பாஜகவினர் யாரும் எனக்கு உதவி செய்ய வேண்டாம் என விஜயலட்சுமி மறுப்பு தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments