ஜார்கண்டில் இளம்பெண் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறையும் காவல் அதிகாரி
ஜார்கண்டில் போலீஸ் அதிகாரி ஒருவர், இளம்பெண் ஒருவரை தலை முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக திரைப்பட இயக்குநர் அவினாஷ் தாஸ் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவை, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் ரீட்வீட் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
அதற்கு பதிலளித்துள்ள அம்மாநில டிஜிபி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த டிஎஸ்பி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காவல் அதிகாரியால் தாக்கப்பட்ட பெண், தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்றும், காதல் திருமணம் தொடர்பாக புகாரளிக்க வந்த நிலையில் தாக்கப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments