கொரோனா பாதிப்பு : புதுச்சேரி சட்டப்பேரவை மேலும் 2 நாட்களுக்கு மூடல்
கொரோனா பாதிப்பு காரணமாக புதுச்சேரி சட்டப்பேரவை மேலும் 2 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், முதலில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, நாளை வரை சட்டப்பேரவை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், எம்.எல்.ஏ. உதவியாளர், காவலர்கள் இரண்டு பேர் என மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதையடுத்து, வருகிற 31ஆம் தேதி வரை சட்டப்பேரவை மூடப்பட்டிருக்கும் என பேரவை செயலாளர் முனுசாமி அறிவித்துள்ளார். வழக்கமான பணிகள் அனைத்தும் வருகிற 3-ம் தேதி முதல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This morning, Hon'ble Speaker of #Puducherry Legislative Assembly, Hon'ble Chief Ministers, Hon'ble Ministers and Legislators underwent for #COVID19 tests as one of the MLA found positive.
— CMOPuducherry (@CMPuducherry) July 27, 2020
Meanwhile Legislative Assembly was disinfected and closed for today and tomorrow. pic.twitter.com/IEJBv11Saq
Comments