ஏரி நீர்ப்பிடிப்பு நில மோசடி : டெண்டுல்கர், நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு விற்பனை என புகார்
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி, நடிகைககள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு ஹைதராபாத்தில், ஏரி நீர்ப்பிடிப்பு நிலத்தை பல கோடிக்கு விற்பனை செய்ததாக, ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது புகார் எழுந்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த கோட்டா ரெட்டி என்பவரின் Sri Aditya Homes என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், அவருடைய உறவினர் சுதீர் ரெட்டி இயக்குநராக பதவி வகித்த நிலையில் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் பகை ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத் அருகே ராவுரியலா கிராமத்தில் உள்ள ஏரி முழுமையாக நிரம்பும்போது, நீர் நிற்கக் கூடிய பகுதியில், விவசாயிகளிடமிருந்து ஏக்கர் 5 லட்சம் ரூபாய் என்ற விலையில் நிலத்தை வாங்கி, அதை ஒரு ஏக்கர் ஒரு கோடி ரூபாய் என கோட்டா ரியல் எஸ்டேட் நிறுவனம் விற்பனை செய்ததாக சுதீர் ரெட்டி புகார் கூறியுள்ளார்.
அந்த நிலத்தில் கட்டிடங்கள் கட்ட முடியாது என்பதை மறைத்து, டெண்டுல்கரின் மனைவி அஞ்சலிக்கு 6.5 ஏக்கர் நிலம், நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணனுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம், ஆந்திராவைச் சேர்ந்த 5 எம்பிகளுக்கும் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சுதீர் ரெட்டி கூறியுள்ளார். ஆனால், தம்மைப் பற்றி சுதீர் ரெட்டி அவதூறு பரப்புவதாக கோட்டா ரெட்டி புகார் அளித்துள்ளார்.
Comments