அயோத்தி ராமர் கோயிலின் பூமிக்கடியில் காலப்பெட்டகம் வைக்கப்பட இருப்பதாக வெளியான செய்திகள் பொய் என மறுப்பு - அறக்கட்டளை பொது செயலாளர்
அயோத்தி ராமர் கோயிலின் கீழே பூமிக்கடியில் கோயில் உருவான வரலாறு, அது தொடர்பான விவரங்கள் அடங்கிய காலப்பதிவுகள் அடங்கிய பெட்டகம் வைக்கப்பட இருப்பதாக வெளியான செய்திகளை அக்கோயில் அறக்கட்டளை பொது செயலாளர் சம்பத் ராய் மறுத்துள்ளார்.
அக்கோயிலின் கீழ் 2 ஆயிரம் அடி ஆழத்தில் அப்பெட்டகம் வைக்கப்பட இருப்பதாகவும், எதிர்காலத்தில் கோயில் வரலாறு குறித்து அறிய விரும்புவோருக்கு அது பெரும் பயனளிக்கும் என்றும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த அறக்கட்டளையின் பொது செயலாளர் சம்பத் ராய் இன்று அளித்த பேட்டியில், அந்த செய்தி பொய் என்றும், அதுபோன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
Comments