உலகின் புலிகள் எண்ணிக்கையில் 70 விழுக்காடு இந்தியாவில் உள்ளது - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
உலகில் உள்ள புலிகள் எண்ணிக்கையில் எழுபது விழுக்காடு இந்தியாவில் உள்ளதாக மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உலகப் புலிகள் நாளை முன்னிட்டு இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கை இடம்பெற்றுள்ள நூலை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர் 1973ஆம் ஆண்டில் இந்தியாவில் 9 புலிகள் காப்பகம் இருந்ததாகவும், இப்போது 50 காப்பகங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் முப்பதாயிரம் யானைகளும், மூவாயிரம் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும், 500 சிங்கங்களும் உள்ளதாகத் தெரிவித்தார்.
Comments