பிக்பாசில் டிஆர்பிக்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு துன்புறுத்தல் - நடிகை ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிக்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு போட்டியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக, அந்த நிகழ்ச்சியின் மூலமே பிரபலமான நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று "பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்பதை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?" என ஓவியா ட்விட்டரில் பதிவிட்டார். பெரும் வியப்பை ஏற்படுத்திய இந்த பதிவுக்கு ஒருவர் "ஆம். தடை செய்ய வேண்டும்" என பதிலளிக்க, அதற்கு ஓவியாவோ "டிஆர்பிக்காக போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வரை அவர்கள் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என விரும்புவதாக" பதிலளித்தார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
Comments