ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்: எஸ்.பி. வேலுமணி

0 2630
ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதிவு

இந்தி திரையுலகில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் ஒரு குழு தனக்கு எதிராக வதந்தி பரப்புவதாக ஏஆர் ரகுமான் அண்மையில் பேட்டியளித்திருந்தார். இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த ஏ.ஆர். ரகுமானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட்டில் ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று, தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் தெரிவித்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments