கொரோனா தொற்று நோயை பரப்பும் நோக்குடன் செயல்படுவதாக சூரியாதேவி மீது வழக்குப்பதிவு
நடிகை வனிதா மறுமணம் குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்டதாக கைதான சூர்யா தேவியை தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த வாரம் கைதான அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் பிணையில் சூர்யா தேவி வெளியே வந்தநிலையில் கொரோனா உறுதியானதால் வீட்டுக்கு சுகாதாரத் துறையினர் சென்றபோது குடும்பத்துடன் தலைமறைவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுகாதாரயினர் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோயை அநேக நபர்களுக்கு பரப்பும் நோக்கத்தில் செயல்படுவது, தடை உத்தரவை மீறுவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தலைமறைவாக இருந்தபடி முகநூல் பக்கத்தில் சூர்யா தேவி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
கொரோனா தொற்று நோயை பரப்பும் நோக்குடன் செயல்படுவதாக சூரியாதேவி மீது வழக்குப்பதிவு #Chennai | #SuryaDevi https://t.co/CGd757K9UY
— Polimer News (@polimernews) July 28, 2020
Comments