ஓய்வுக்கு பிறகும் 73 ஆண்டுகள் வாழ்க்கை ! விமானப்படையின் மூத்த பைலட்டுக்கு வயது 100

0 6813

இந்திய விமானப்படையின் வயதான பைலட் தலீப் சிங் மஜிதியாவுக்கு இன்று 100-வது வயது பிறக்கிறது. இதையடுத்து, அவருக்கு விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ் . பகாதுரியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1940ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் இணைந்த போது, தலீப் சிங் மஜிதியாஹவுக்கு வயது 20 தான் ஆகியிருந்தது. ஸ்குவாட்ரான் எண் 1 என்ற ஒரே விமானப்படை பிரிவுதான் அப்போது இந்திய விமானப்படையில் இருந்தது. அதில்தான், தலீப் சிங் மஜிதியா பணியாற்றினார். Westland Wapiti IIA, the Hawker Audax , Hart ஆகிய விமானங்கள்தான் அப்போது, இந்திய விமானப்படையில் இடம் பெற்றிருந்தன. இந்த அனைத்து விமானங்களையும் தலீப்சிங் மஜிதியா ஓட்டியுள்ளார். பின்னர் Hawker Hurricane விமானத்தையும் ஓட்டும் அனுபவமும் தலீப் சிங்குக்கு கிடைத்தது.  இரண்டாம், உலகப் போரில் பங்கேற்ற பெருமையும் இவருக்கு உண்டு. பிரிட்டிஷ் தயாரிப்பான ஹாவாக்கர் ஹர்ரிகேன் விமானம்தான் இவருக்கு மிகவும் பிடித்தமானது என்று சொல்வார். 

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947- ம் ஆண்டுதான் இவர் விமானப்படையிலிருந்தும் ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகும் 73 ஆண்டுகள் வாழ்ந்துள்ள அவருக்கு இன்று 100 வது பிறந்தநாள். தற்போது, உயிரோடுள்ள விமானப்படை பைலட்டுகளில் இவர்தான் அதிக வயதானவர். புது டெல்லியில் தன் 100- வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments