சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 2 பேருக்கு கொரோனா
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேலும் இரு போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார். மேலும், வழக்கை விசாரித்து வரும் குழுவில் இடம்பெற்றிருந்த 5 சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த காவலர்கள் முருகன், முத்துராஜாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 2 பேருக்கு கொரோனா #Sathankulam | #SathankulamCase | #Covid19 https://t.co/ZlkUYVO2Ia
— Polimer News (@polimernews) July 28, 2020
Comments