பட்டப்பகலில் பொதுத்துறை வங்கியில் ரூ.11 லட்சம் கொள்ளை

0 2442

பஞ்சாபில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் இருந்து சுமார் 11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஹோசியார்பூர் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குள் தலைப்பாகை கொண்டு முகத்தை மறைத்தவாறு,வாடிக்கையாளர்களை போன்று 3 பேர் நுழைந்துள்ளனர்.

தொடர்ந்து, தங்கள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு வங்கி ஊழியர்களை மிரட்டும் அந்த நபர்கள், காசாளர் அறையில் இருந்த பணத்தை பொறுமையுடன் பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments