மரண கலாய் மாதிரி.. இது கொரோனா கலாய்..! வாங்க பழகலாம்ன்னு நம்பிக்கை

0 3320

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை முகாமில் நேரத்துக்கு முட்டையுடன் உணவு வழங்கப்படுவதால் நோயாளிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அமைந்துள்ள அறிஞர் அண்ணா அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அதில் ஒரு சிலர் கல்லூரியின் மொட்டை மாடியில் இருந்தவாறே, கொரோனா உயிர்க்கொல்லி நோயைக் கிண்டல் செய்தும், புதிய நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட ஒருவர், கொரோனாவைக் கண்டுபிடித்த நபருக்கும் தமிழக அரசுக்கும், தனக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்த மருத்துவர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிக்கிறார்..

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இடத்தில், தான் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், காலை முதல் இரவு வரை வேளாவேளைக்கு தரப்படும் உணவு வகைகளைப் பட்டியலிட்டும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார் அவர்.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பதைப் போன்ற தொல்லை இன்றி மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், மனைவி கூட இந்த அளவுக்கு சரியான நேரத்தில் உணவு தருவதில்லை என்கிறார்

நோய்த்தொற்றுக்காக பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறுவதுடன், நம்பிக்கையளிக்கும் விதமாக அந்த வீடியோவை பாதிக்கப்பட்ட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments