2019-2020ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி., இழப்பீடாக ரூ.1.65 லட்சம் கோடி விடுவிப்பு.. தமிழகத்திற்கு ரூ.12,305 கோடி நிதி..!
2019-20ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி இழப்பீடாக 1 லட்சத்து 65 ஆயிரத்து 302 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2019-20 நிதியாண்டில் மொத்தமாக சுமார் 95 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரியாக வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இறுதியாக 13 ஆயிரத்து 806 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது.
இழப்பீட்டை சரிசெய்ய 2017 முதல் 2019 வரையிலான செஸ் தொகை கையிருப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், தமிழகத்துக்கு மட்டும் 12 ஆயிரத்து 305 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
Comments